Wednesday, February 22, 2012

மகரந்தத்துகள்கள் by Malathy

திரு ஜக்கிவாசுதேவ் அவர்கள் "காட்டுப்பூ" என்றொரு பத்திரிகை வெளியிடுகிறார்கள். அதிலிருந்து சில

மகரந்தத்துகள்கள்.

கேள்வி: நம் இந்தியக்கலாசாரத்தில் திருமணம், பூஜை முதலிய நிகழ்ச்சிகளும் தினமும் சாப்பிடுவது போன்றவைகளும் தரையில் உட்கார்ந்தே செய்யப்படுகின்றன. அதற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா? பதில்: ஆம். நம் உடம்பு பஞ்சபூதமாகிய மண், வாயு, நீர், ஆகாசம், அக்னி முதலியவைகளால் ஆனது.

நம் உடம்பு மண்ணில் தோன்றி, மண்ணிலேயே மறையப்போகிறது. நம் தரையில் வெறும்காலுடன் நின்றாலோ, தரையில் உட்கார்ந்தாலோ படுத்தாலோ பூமியில் உள்ள காந்த-அதிர்வுகள் நம் உடலுக்குள் ஊடுருவி நம் செயல்திறனை அதகரிக்கும். நம் முன்னோர்களுக்கு நாற்காலி செய்யத்தெரியததால் நம் தரையில் உட்கார்ந்து நம் காரியங்களை செய்யவில்லை. நமது உடல்நலம் மனவளம் கருதியே இவ்வாறாக அமைத்தார்கள். தரையில் சப்பணமிட்டு உட்கார்வது என்பது ஒரு யோகப்பயிற்சி. பாம்புகள் முதலிய மண்வாழ்உயிரினங்களுக்கு பத்துநாட்கள் கழித்து கலிபோர்னியாவில் வரப்போகும் பூகம்பம் இங்கு இன்றே தெரியும். இரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இங்கே(ஈஷா-மையத்தில்) யோகாப்பயிற்சிக்கு வரும்போது நான் அவர்களை, தினந்தோறும் சிறிதளவு நேரம் வெறும் கைகள், கால்களுடன் தோட்டவேலை செய்யச்சொல்கிறேன். முன்பெல்லாம் மண்ணில் குழி பறித்து வியாதியஸ்தர்களை உட்காரவைத்து கழுத்து மட்டும் வெளியில் இருக்கும்படி மூடிவிடுவோம் ஆனால் இப்போது அப்படி செய்தால், பயப்படுகிறார்கள். நமது முன்னோர்கள் அதனால்தான் தரைக்கும் நமக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தவே, எல்லா நிகழ்சிகளும் தரையில் அமர்ந்து செய்யும்படியாகவே அமைத்தார்கள்."

1 comment: