Wednesday, February 22, 2012

மகரந்தத்துகள்கள் by Malathy

திரு ஜக்கிவாசுதேவ் அவர்கள் "காட்டுப்பூ" என்றொரு பத்திரிகை வெளியிடுகிறார்கள். அதிலிருந்து சில

மகரந்தத்துகள்கள்.

கேள்வி: நம் இந்தியக்கலாசாரத்தில் திருமணம், பூஜை முதலிய நிகழ்ச்சிகளும் தினமும் சாப்பிடுவது போன்றவைகளும் தரையில் உட்கார்ந்தே செய்யப்படுகின்றன. அதற்கு ஏதாவது முக்கிய காரணம் உண்டா? பதில்: ஆம். நம் உடம்பு பஞ்சபூதமாகிய மண், வாயு, நீர், ஆகாசம், அக்னி முதலியவைகளால் ஆனது.

நம் உடம்பு மண்ணில் தோன்றி, மண்ணிலேயே மறையப்போகிறது. நம் தரையில் வெறும்காலுடன் நின்றாலோ, தரையில் உட்கார்ந்தாலோ படுத்தாலோ பூமியில் உள்ள காந்த-அதிர்வுகள் நம் உடலுக்குள் ஊடுருவி நம் செயல்திறனை அதகரிக்கும். நம் முன்னோர்களுக்கு நாற்காலி செய்யத்தெரியததால் நம் தரையில் உட்கார்ந்து நம் காரியங்களை செய்யவில்லை. நமது உடல்நலம் மனவளம் கருதியே இவ்வாறாக அமைத்தார்கள். தரையில் சப்பணமிட்டு உட்கார்வது என்பது ஒரு யோகப்பயிற்சி. பாம்புகள் முதலிய மண்வாழ்உயிரினங்களுக்கு பத்துநாட்கள் கழித்து கலிபோர்னியாவில் வரப்போகும் பூகம்பம் இங்கு இன்றே தெரியும். இரத்தக்கொதிப்பு, சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இங்கே(ஈஷா-மையத்தில்) யோகாப்பயிற்சிக்கு வரும்போது நான் அவர்களை, தினந்தோறும் சிறிதளவு நேரம் வெறும் கைகள், கால்களுடன் தோட்டவேலை செய்யச்சொல்கிறேன். முன்பெல்லாம் மண்ணில் குழி பறித்து வியாதியஸ்தர்களை உட்காரவைத்து கழுத்து மட்டும் வெளியில் இருக்கும்படி மூடிவிடுவோம் ஆனால் இப்போது அப்படி செய்தால், பயப்படுகிறார்கள். நமது முன்னோர்கள் அதனால்தான் தரைக்கும் நமக்கும் உள்ள தொடர்பை வலுப்படுத்தவே, எல்லா நிகழ்சிகளும் தரையில் அமர்ந்து செய்யும்படியாகவே அமைத்தார்கள்."

Wednesday, February 15, 2012

கனவலைகள் by Malathy



அழகிய ஒரு தோட்டம். அநேகம் பேர் கூடியிருக்கிரார்கள். பின்னணியாக மெலியதாக அஷ்டபதி பாடும் ஒலி கேட்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக உரத்து எழுந்து வியாபித்து அந்த இடம்பூராவும் இனிமையாக பரவுகிறது. மனது சஞ்சலமில்லாமல் அந்த இசையில் குவிகிறது. ஆனால் திடுதிடுவென்ற பெரிய சப்த்துடன் நாலைந்து குதிரைகள் பாய்ந்து வருகின்றன. அவற்றின் மேல் அமர்ந்திருக்கும் மனிதர்கள் காவி உடுத்தி தலையில் முண்டாசு முண்டாசு கட்டி அதையே மூக்கில் இறக்கி முகவாயையும் சேர்த்து மூடி இருக்கிறார்கள்.

அவர்களைப்பர்ர்த்தமாத்திரத்திலேயே மனத்தில் ஒரு இனம் தெரியாத பயம் பந்து போல் எழுந்து மேலேறி தொண்டையை அடைக்கிறது. இந்த சாதுக்களால் நமக்கு என்ன ஆபத்து வரப்போகிறது என்று அறிவு சொன்னாலும் மனதில் கிலி உண்டாகிறது. அச்சமயம் ஓர் அசரீரிஒலிக்கிறது: "இவர்கள் பாஷண்டிகள்! இவர்களிடமிருந்து உங்களை காத்துக்கொள்ளுங்கள்! ஆனால் ஆயுதத்ததால் அல்ல ! அஷ்டபதி பாடுங்கள்! திவ்யதம்பதிகளான ஸ்ரீ ராதாகிருஷ்ண யுகள கீதத்தை பாடி உங்களை சுற்றி ஒரு பாதுகாப்பு வேலி இடுங்கள்! அந்த அரணை ஊடுருவ ஒருவருக்கும் சக்தி இல்லை "என்பதுவே அது.

காக்ஷி மாறுகிறது.

பெரிய சமுத்திரம் என்கிறார்கள் ஆனால் எனக்குத்தெரிவதெல்லாம் ஒரு சின்னக்குளம் அளவே உள்ள ஒரு பகுதி தான். ஆனாலும் அதிலும் பெரிய அலைகள் எழும்பிக்குதித்து கும்மாளம் போடுகிறது அதில் ஒரு சிறிய மரக்கலம்! பெரிய கப்பலாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள்! சிறிய பாய்மரப்படகு என்றே சொல்லலாம்.ஒரு பத்து பேர்களே பயணம் செய்கிறார்கள். என்னையும் என் கணவரயையும் தான் எனக்குத்தெரிகிறது. அந்த மரக்கலத்தில் எங்களைத்தவிர தலையில் மயிலிறகு சூடிய பாலகன் ஒருவனும் இருந்தான். எனக்கென்னவோ அவனைப்பார்த்தால் கண்ணனென்றுதோன்றுகிறது. "அவனுக்கு இங்கே என்ன வேலை? அல்லது நாம்தான் இங்கே என்ன செய்கிறோம்? இப்படியாக என் சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும்போதே படகு ஆடத்தொடங்குகிறது அதன் வேகம் சிறிது சிறிதாக கூடிக்கொண்டேபோய். ஒருசமயத்தில் மிக வேகமாக சுழன்று எங்களை நிலை குலையசெய்கிறது. நானும் என் கணவரும் பீதியில் உறைகிறோம்! ஆனால் அந்த சிறுவனோ புன்னகைபூத்த முகத்துடன் ஒரு சிறிய கட்டை ப்பலகையை தூக்கி தண்ணீரில் எறிந்து "நீங்கள் இருவரும் அதில் அமர்ந்து கரை சேர்ந்துவிடுங்கள்! " என்கிறான். நாங்கள் இவ்வளவு சிரிய பலகையில் எப்படி போகமுடியும் என்றுகூட சிந்திக்காமல் அச்சிறுவனை முழுமையாக நம்பி அதில் இறங்குகிறோம். அது சங்கப்பலகைபோலும்!

அச்சிறுபலகையில் நாங்கள் இருவரும் தாராளமாக ஆச்சர்யப்படும் விதத்தில் உட்கார்ந்து துடுப்பு இல்லாத காரணத்தினால் கைகளாலேயே அதைச்செலுத்தி கரையை த்தொடுகிறோம். கரையை அடைந்த உடனேயே ஒரு நிம்மதி, ஒரு சாந்தி ஏற்படுகிறது.

ஒரு பெரிய அறை. அறைநிறைய தலையணைகள் அவை மிருதுவான பஞ்சுத்தலயணைகள் அல்ல. அவை கனமான பாராங்கல்லை ஒத்திருந்தன. ஆனால் விட்டத்தில் வௌவால் போல் தொங்கிக்கொண்டும் மிதந்து கொண்டும் இருந்தன. மேலேயிருந்து சிலசமயம் தடாலென்று கீழெ விழுவதும் நான் மனம் படபடக்க அதிலிருந்து தப்பிக்க தலையைக்குனிந்துக்கொண்டு ஓட்டமாய் ஓடி மூலையில் சென்று ஒளிந்துகொள்வதுமாய் கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறேன் ஆனால் பயத்தில் உள்ளம் விதிர்விதிர்க்கிறது. கண்களைமூடி மனம் குவித்து கண்ணீர்மல்க பிரார்த்திக்கிறேன் என்ன ஆச்சர்யம்? கண்களை திறந்து பார்ததால் அதே சின்னஞ்சிறு பாலகன், மயில்பீலி சூடியவன் புன்னகையுடன் அவற்றை பந்துபோல மேலேயே செலுத்தி அங்கேயே அவற்றை நிலைக்கச்செய்கிறான். என் பயமும் அகலுகிறது. ஆனால் இந்த விளையாட்டில் அவனுடைய மோவாயில் காயம் பட்டு உதிரத்துளிகள் கீழே சொட்டுகின்றன. என் நெஞ்சில் சொல்லோண்ணாத்துயரம் அழுத்துகிறது "நம்மால்தானே பாவம், இக்குழந்தைக்கு இவ்வளவு சிரமம், கஷ்டம் "என்று "அங்கே பாருங்கள் கண்ணனின் முகத்தில் ரத்தம்!” என்கிறேன். ஆனால் என் கணவருக்கு கண்ணனும் தெரியவில்லை, அவன் பட்ட பாடும் புரியவில்லை!

நாம் விழுத்திருக்கையில் ஓராயிரம் எண்ணங்கள் நாம் மனதில் ஓடிக்கொண்டிருக்கின்றன. நமது ஆழ்மனதில் புதைந்து கிடக்கும் சிலபல உணர்சிக்குவியல்களே கனவுகளாக தம்மை வெளிப்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். நாம் நம் கனவில் காண்பவர்கள் நம்முடன் எவ்வகையிலேயும் தொடர்பு உடையவர்கள்தாம், அதாவது நமக்கு கனவில் தாத்தாபாட்டி வரை உள்ள போன தலைமுறைதான் அதற்கு முன் அவர்களுடைய அம்மா அப்பா என்கிற உள்ள நமது முன்னோர்கள் நமது கனவுகளில் வருவது கிடையாது என்று திட்டவட்டமாக கூறுகிறார்கள். ஒருவேளை அவர்களது புகைப்படங்கள் இல்லாததும், நமக்கு அவர்களைப்பற்றிய எந்தவொரு தகவலும் இல்லாததும் காரணமாக இருக்கலாம். கனவுகளைப்ப்ற்றிய ஆராய்ச்சி அன்றும் இன்றும் நடந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் ஆன்மீகவாதிகளில் பலர் நாம் நேரில் பார்த்திராத கடவுளை கனவில் கண்டுள்ளனர். அதற்கும் மேலே ராமகிருஷ்ண பரமஹம்சரைப்போன்ற வெகு சிலரே கடவுளை நேரில் பார்த்து மகிழ்ந்திருக்கிர்ரர்கள். இந்நிலையில் எனக்கு கண்ணன் சிலை ரூபமாகவோ ஓவியமாகவோ கனவில் காட்சி தராமல் இயல்பான சிறுவனாக வந்தது எனக்கு பெரும் வியப்பாகவும் ஆனந்தமாகவும் இருந்தது. அந்தச்சிறு குழந்தை கண்ணனைப்பற்றி நான் இங்கு சொல்லியே ஆகவேண்டும் . என்வீட்டில் கிட்டத்தட்ட நாற்பது ஆண்டு காலமாக ஒரு இரண்டு வயது குழந்தை கண்ணனின் மண்பிரதிமை உள்ளது. தலையில் குட்டிக்கொண்டையும் அதில் மயிலிறகும், குறும்புச்சிரிப்பும், குண்டுக்கன்னங்களும் இடது கையில் பாயசப்பாத்திரமும் வலது கையில் வெண்ணை உருண்டையும் வைத்துக்கொண்டு திகம்பரனாக, உள்ளத்தை கொள்ளை கொள்வான். வெகு காலம்கழித்து நான் ஸ்ரீ க்ருஷ்ணகதாம்ருதம் படிக்க வாய்ப்பு வந்தது. அதில் ,

पाणौ पायसभक्तमाहतरसं बिभ्रन् मुदा दक्षिणे

सव्ये शारदचन्द्रमण्डलनिभं हैयङगवीनं दधत् ।

कण्ठे कल्पितपुण्डरीकनखमप्युद्धामदीप्तिं वहन्

देवो दिव्यदिगम्बरो दिशतु नः सौख्यं यशोदाशिशुः ॥


விழித்திருக்கும்போது நமது மனத்தில் எண்ணலைகள், ஓயாமல் ஒழியாமல் அடித்துக்கொண்டிருக்கும். அவைகள் கடலலைகள் போலவே அடுக்கடுக்காக எழுந்து வளைந்து மனக்க்ரையை தொட்டு திரும்பும்

கனவலைகள் நமது உறக்கத்தில் நாம் காண்பவை. சில வேளைகளில் விசித்திரமாகவும், சில சமயங்களில் பயங்கரமாகவும், பலசமயங்களில் துக்கம், மகிழ்ச்சி என்பது போலவும் வருவதுண்டு. எனக்கு வந்த மேற்கண்ட கனவு ஏதோ ஒரு குறிப்பை எனக்கு உணர்த்துவதாகவே அறிந்தேன். மூன்று கனவுகளுமே ஒரே இரவில் அடுத்தடுத்து வந்தவைதான். ஆபத்து வருமென்றும், ஆனால் "நம்பினார் கெடுவதில்லை" என்பதை உறுதிபடுத்தி என் மனக்கவலையை போக்குவதற்கே அவை எனக்கு தோற்றுவிக்கப்பட்டன என்றும் நம்பினேன். முதல் கனவில் வேடதாரிகளிடம், ஏமாறவேண்டாம் என்றும் அந்த ஆபாத்துகளிருந்து விலக நாமசங்கீர்த்தனமே உபாயம் என்றும் இரண்டாவது கனவில், "சம்சார சாகரத்தை" கடப்பதற்கு க்ருஷ்ணக்ருபை வேண்டும், அது இருந்தால் கடலும் முழங்கால்வரைதான், ஒரு சிறு பலகையில்கூட கடலைக்கடந்து விடலாம்" என்றும் இறுதியாக வந்த கனவில் பாறைகளாக வரும் பிரச்சனைகள் பஞ்சாக விலகும் என்றும் நான் உணர்ந்து கொண்டேன்.

இந்த செய்தியை எனக்குச்சொல்லி, எல்லாவித ஆபாத்துகளிலிருந்தும் என்னைக்கைதூக்கி விடுபவன் "ஒரு கையில் பாயச கிண்ணத்தையும் ஒரு கையில் சரத்காலச்சந்திரனை ஒத்த வெண்ணையும்” வைத்துக்கொண்டிருக்கும் அந்த க்ருஷ்ணனேதான்!!!